திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வருகை அலைமோதியதால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையான நேற்றும், இன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இன்று அதிகாலை கோயில் நடை திறக்கும்போதே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தை கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. காலை 10 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித்தது.ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அதனால், பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
The post அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல்: 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.