திருச்சி: அண்ணாமலை பினாமி ரூ.800 கோடி சொத்து குவித்துள்ளதாக பாஜ மாஜி நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் 7வதாக ஒரு கேள்வி கேட்டு பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். பாஜவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள், நான் கேட்கும் 6 கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என கடந்த 24ம்தேதி பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில் 7வதாக நேற்று ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்!!… இன்று உங்களுடைய பிரஸ்மீட் பார்த்தேன், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, விஜயபாஸ்கர் என பதட்டத்தில் உளறினீர்கள். பாவம், உங்களுடைய ‘ரீல் அந்து போய்’ பல மாசமாச்சு, நாடகம் முடியும் நேரமிது. அண்ணாமலை மூன்றே வருடத்தில் ரூ.10,000 கோடி சொத்து சேர்த்து விட்டார் என முதன் முதலாக நான் சொன்ன போது உங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் ‘வார்ரூம் ஆட்களும்’, உங்களுடைய உண்மை முகத்தை உணராத பாஜ தொண்டர்களும் என்னை திட்டி தீர்த்தார்கள். இன்று நான் சொன்னது முற்றிலும் உண்மை என பாஜ ஆளும் ஒன்றிய அரசின் வருமான வரித்துறையே உறுதி செய்துள்ளது.
உங்களின் ஒரு பினாமி, சத்திரபட்டி செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ரூ.10 கோடி ரொக்கம், ரூ.240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை. சரி, ஏழாவது கேள்விக்கு வருவோம்…உங்க அக்கா புருஷன் சிவக்குமாரும், சத்திரப்பட்டி செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா? இல்லையா?, ஊழல் என்றாலே ஊளையிட்டு கொண்டு வருவீர்களே, ரூ.240 கோடி வரி ஏய்ப்பு என்றால் ரூ.800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரி ஏய்ப்பு நடந்தது கணக்கு சரியா மலை?… இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The post அண்ணாமலை பினாமி ரூ.800 கோடி சொத்து குவிப்பு: 7வது கேள்வி கேட்டு திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில் பகீர் தகவல் appeared first on Dinakaran.