அண்ணாமலை, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு

2 days ago 1

கடலூர்,

பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கரையை கடந்த புயல் வலுவிழந்து உள்ளது. எனினும், உள் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை மற்றும் வெள்ளம் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய உறுப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

கடந்த நவம்பர் 27-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், பெஞ்சல் புயல் மற்றும் கனமழை தொடர்ச்சியாக, தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

Read Entire Article