சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவோம். அவரிடம் அறிக்கையும் தருவோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் மூலம் இடைக்கால நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. சாட்டையடி தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.