அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய புதிய அமைச்சர்கள்

3 months ago 29

சென்னை,

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், நாசர் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Read Entire Article