அணைக்கட்டில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

3 months ago 20

செய்யூர்: அணைக்கட்டில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகேயுள்ள பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு கிராமத்தில், அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள செம்பூர், தண்டரை, கொஞ்சிக்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சமுதாயக்கூடம் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள், காது குத்தல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி நீண்ட தொலைவில் உள்ள பவுஞ்சூர், கூவத்தூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பண விரையமும், கால விரையமும் ஏற்படுகிறது. அணைக்கட்டு பகுதியை மையமாக கொண்டு அப்பகுதியில் சமுதாய கூடம் அமைத்துத்தர வேண்டும் என கிராமமக்கள் பல ஆண்டு காலமாக போராடி வருகின்றனர்.

ஆனால், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு அணைக்கட்டு பகுதியில் புதிய சமுதாய கூடம் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post அணைக்கட்டில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article