பாலக்காடு, மார்ச் 29: அட்டப்பாடி ஜெல்லிப்பாறை அருகே பேக்கரிக்குள் புகுந்த காட்டுப்பன்றி அட்டகாசத்தால் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்தனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஜெல்லிப்பாறை அருகே தேவாலயம் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகின்றன. சாலையின் குறுக்கே அடிக்கடி கடந்து செல்வதால் இரு சக்கர ஓட்டுநர்கள் காட்டுப்பன்றிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
ஜெல்லிப்பாறை தேவாலயம் அருகேயுள்ள தனியார் பேக்கரி கடைக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கடை உரிமையாளர் ஷாஜூ (56), முண்டன்பாறையை சேர்ந்த மோகனன் (52) ஆகிய இருவரை முட்டி மோதி காயப்படுத்தியது. இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு அகழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு திரும்பினர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அட்டப்பாடி ஜெல்லிப்பாறை அருகே பேக்கரிக்குள் புகுந்த காட்டுப்பன்றி மோதி 2 பேர் காயம் appeared first on Dinakaran.