அட்டகத்தி தினேஷ் நடிக்கும்'கருப்பு பல்சர்'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

3 hours ago 4

சென்னை,

பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது.

தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த லப்பர் பந்து படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் 'கருப்பு பல்சர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று உழவர் திருநாள் கொண்டாடப்படும்நிலையில், கருப்பு பல்சர் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் `கருப்பு Pulsar' படத்தின் First Look Poster வெளியாகி உள்ளது#Dinesh | #karuppupulsarfirstlook | #ThanthiTV pic.twitter.com/b0Ukq27cEP

— Thanthi TV (@ThanthiTV) January 15, 2025
Read Entire Article