சென்னை: அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக சென்னையில் நடந்த கால்பந்து போட்டி அமைந்திருந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கால்பந்து போட்டி குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடந்ததைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு பெருமிதத்தோடு நேற்று இரவு ஆர்ப்பரித்துள்ளது. ஒரு விளையாட்டுப் போட்டி என்பதை தாண்டி, நினைவில் கொள்ளத்தக்க, அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இப்போட்டி அமைந்திருந்தது. பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக கால்பந்து போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.