
சென்னை,
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கடைசியாக கடந்த 14-ம் தேதி ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் சாவா. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் ராஷ்மிகா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ராஷ்மிகாவின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, அடுத்ததாக வெளியாக உள்ள ராஷ்மிகா படம் 'சிக்கந்தர்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருக்கும் இப்படம் வருகிற மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது.