அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

6 months ago 19

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் அடித்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்டின் விக்கெட்டை பறிகொடுத்தது. நேற்று இருந்த அதே 28 ரன்களிலேயே நடையை கட்டினார். நிதிஷ் ரெட்டி மட்டும் தனி ஆளாக போராடி இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 2-வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

Read Entire Article