அடிலெய்டு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற மேடிசன் கீஸ், ஃபெலிக்ஸ்

2 hours ago 4

அடிலெய்டு: அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெசிகா பெகுலா (30வயது, 7வது ரேங்க்), மேடிசன் கீஸ் (29வயது, 20வது ரேங்க்) மோதினர். இப்போட்டியில் மேடிசன், 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் ஆனார். ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் (24வயது, 29வது ரேங்க்), செபாஸ்டியன் கோர்டா (24வயது, 22வது ரேங்க்) மோதினர். இப்போட்டியில் ஃபெலிக்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் குவோ அன்யூ(சீனா)/அலெக்சாண்ட்ரா பனோவா (ரஷ்யா) இணை 7-5, 6-4 என நேர் செட்களில் ஹதாத் மாயா (பிரேசில்) / லாரா சிக்மண்ட் (ஜெர்மனி) இணையை வீழ்த்தி சாம்பியனானது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சிமோன் பொலேல்லி/ஆண்ட்ரியா வாவசோரி இணை, 4-6, 7-6 (7-4), 11-9 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கெவில் கிராவியட்ஸ்/டிம் புயட்ஸ் இணையை 2 மணி 44 நிமிடங்கள் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

The post அடிலெய்டு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற மேடிசன் கீஸ், ஃபெலிக்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article