அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் அவதி: விஷம் குடித்து பெண் தற்கொலை

2 months ago 13

மதுரை,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தீபா(36 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா விஷம் குடித்துள்ளார்.

இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா இறந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article