அடிக்கடி நான்கு சக்கர வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு

4 weeks ago 5

கரூர், டிச. 16: கரூர் பகுதியில் இருந்து திருச்சி, குளித்தலை, மணப்பாறை, தரகம்பட்டி, புலியூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், மற்ற வாகனங்களும் சுங்ககேட், கருப்பக்கவுண்டன்புதூர், தெரசா கார்னர் வழியாக காந்திகிராமத்தை தாண்டி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும், சில அரசு நிறுவனங்களும் உள்ளன. இந்த பகுதியில், குறிப்பாக தெரசா கார்னர் பகுதியில் மூன்று வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.கரூர் பகுதியில் இருந்தும், காந்திகிராமம் போன்ற பகுதிகளில் இருந்தும், ராமானு£ர், கொளந்தானு£ர், அரசு மருத்துவக் கல்லு£ரி, பசுபதிபாளையம், ஐந்து ரோடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் தெரசா கார்னர் பகுதியில் உள்ள பிரிவுச் சாலையில் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்நிலையில், தெரசா கார்னர் பகுதியை ஒட்டியுள்ள கருப்பக்கவுண்டன்புதூர் பிரிவு சாலை அருகே நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

காந்திகிராமம் போன்ற பகுதிகளில இருந்து தெரசா கார்னர் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியை தாண்டி செல்லும் வாகனங்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் அதிக கவனம் மேற்கொண்டு, வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடிக்கடி நான்கு சக்கர வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article