
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த 10-ந் தேதி 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63-வது படமான 'குட் பேட் அக்லி' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த பல மாதங்களாக இருந்து வருகின்றது. அந்த வகையில், இந்த படத்தினை சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இவர்களில் யாராவது இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் இவர்களில் யாரும் இல்லை என்றும் 'குட் பேட் அக்லி' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் 64-வது படத்தை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாராங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
