அஜித்குமார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல்: பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

5 hours ago 4

திருப்புவனம்: தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை தாக்​கல் செய்​கிறார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மாரிடம், நகை திருட்டு தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அஜித்​கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். பின்​னர் நவீன்​கு​மாரை விட்​டு​விட்​டு, அஜித்​கு​மாரை டிஎஸ்​பி-​யின் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். இதில் அவர் உயி​ரிழந்​தார்.இது தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் ராஜா, பிரபு, கண்​ணன்,ஆனந்த், சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, ஜூலை 8-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது.

Read Entire Article