அஜித் நடிக்க மறுத்த 5 படங்கள்

3 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், அஜித் நடிக்க மறுத்த 5 படங்களை பற்றி தற்போது காண்போம்.

1. நேருக்கு நேர்

விஜய், சூர்யா நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான படம் நேருக்கு நேர். இதில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அஜித் தேர்வாகி இருக்கிறார். மேலும், 18 நாட்கள் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். ஆனால், பின்னர் கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக அஜித் விலகி உள்ளார்.

2. ரன்

மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான படம் ரன். இயக்குனர் லிங்குசாமி முதலில் இப்படத்தில் நடிக்க அஜித்தை அணுகி இருக்கிறார். இருப்பினும், அஜித் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

3. ஜீன்ஸ்

பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1998-ம் ஆண்டு வெளியான படம் ஜீன்ஸ். பிரசாந்திற்கு முன் அஜித் குமாரை இயக்குனர் இப்படத்தில் நடிக்க அணுகி இருக்கிறார். ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் அஜித் மறுத்திருக்கிறார்.

4. நான் கடவுள்

பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் நான் கடவுள். இப்படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்திருக்கிறார். ஆனால், சில காரணத்தினால் அவர் நடிக்க மறுத்துள்ளார்.

5. ஜெமினி

விக்ரம் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான படம் ஜெமினி. எருமுகம் என்ற பெயரில் அஜீத் நடிக்க இருந்த இந்த படம் பின்னர் சியான் விக்ரமிடம் சென்றது.

Read Entire Article