அசுர வேகத்தில் பைக் ஓட்டியதை கண்டித்ததால் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து ஹெல்மெட்டால் சரமாரி தாக்குதல்: சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது

3 weeks ago 3

சென்னை: ேமாதுவது போல் அசுர வேகத்தில் பைக் ஓட்டியதை கண்டித்த மயிலாப்பூர் உதவி ஆய்வாளரை ஷூ காலால் மிதித்து, ஹெல்மெட்டால் தாக்கிய சட்டக்கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணிமாறன் என்பவர் ரோந்து வாகன பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி இரவு பணி முடிந்ததும், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சென்றபோது, அசுர வேகத்தில் பைக்கில் வந்த ஒருவர், உதவி ஆய்வாளர் மணிமாறனை இடிப்பது போல் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமாறன், அந்த நபரை கண்டித்துள்ளார். அப்போது, அந்த நபர் மீண்டும் மணிமாறனை இடிப்பது போல் வாகனத்தை வழிமறித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர், ‘நான் வாக்கீல் டா… உன்னை சும்மா விடமாட்டேன்,’’ என்று கூறி உதவி ஆய்வாளர் மணிமாறனை பைக்கில் இருந்து கீழே தள்ளி தனது ஷூ காலால் அவரது நெஞ்சில் மிதித்ததுடன், ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் மணிமாறனுக்கு காயம் ஏற்பட்டது.

உடனே மணிமாறன் தனது மகனுக்கு போன் செய்து வரவழைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நியைலத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, பைக் பதிவு எண் மூலம் விசாரணை நடத்திய போது, உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய நபர், மயிலாப்பூர் டிமாண்டி தெருவை சேர்ந்த மஹின் கோஸ்கா (26) என்றும், இவர் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் சைபர் சட்டப்பிரிவு உதவி பேராசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் தனியார் சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் மஹின் கோஸ்கா மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ேநற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் ஹெல்மெட் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அசுர வேகத்தில் பைக் ஓட்டியதை கண்டித்ததால் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து ஹெல்மெட்டால் சரமாரி தாக்குதல்: சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article