அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும்: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

3 months ago 17

சென்னை: அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேரிய வங்கதேசத்தவரை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்கள் குறிப்பாக மாணவர் சங்கம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு மாணவர் அனைப்புகள் பங்கேற்றது. இதில் அரசுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே அசாம் உடன்படிக்கையானது கையெழுத்தானது.

அந்த உடன்படிக்கையின் படி 1966 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் குடியேறியவர்கள் இந்திய குடியுறிமை கோர குடியுறிமைசட்டம் வகை செய்கிறது. 1966 ஜனவரி 1-ம் தொடங்கி 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்த காலகட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் குடியேறியவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவர் என்று அறிவிக்கவும் வகைசெய்தது. இது இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கு முதல் நாள் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவை எதிர்த்து சிலர் பூர்வகுடிகள் சார்பில் உச்சர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அரசியல் சாசன சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும் என்றும், குடியுறிமை சட்ட திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

The post அசாம் உடன்படிக்கையை அங்கிகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும்: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article