அங்கன்வாடி ஊழியர்களின் 2 நாள் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது

2 weeks ago 3

திருப்பூர், நவ.6: அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகதில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத்தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாநில தலைவர் ரத்தினம்மாள், மாநில பொதுச்செயலாளர் டெய்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய டிஹெச்ஆர் வழங்குவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் அங்கன்வாடி மாவட்ட அலுவலர் மகாலட்சுமி தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர், சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post அங்கன்வாடி ஊழியர்களின் 2 நாள் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது appeared first on Dinakaran.

Read Entire Article