தனுசு
தனுசு ராசி அன்பர்களே..
யாரிடம் என்ன திறமை இருக்கிறதோ அவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பவ்ர் நீங்கள்.
சிறப்பு பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தங்களுக்கு கிடைத்துவிடும். உடன் வேலை செய்பவர்களிடம் தங்கள் சொந்தக் கதைகளை சொல்லாமல் இருப்பது நல்லது.
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருத்தல் நல்லது. யாரிடமும் பணம் கொடுக்கும் போது அதற்குண்டான ஆவணங்களை பெறுவது நல்லது.
தங்கள் கணவரிடம் தாங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நீங்கள் தாங்கள் அதனை விட்டுக்கொடுத்து தாங்கள் அவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
கலைஞர்கள் விரும்பிய படத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைத்து தங்களுக்கு தங்கள் திறமையினை காட்டி நல்ல பெயர் வாங்குவீர்கள்.இந்த படத்தின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மாணவர்கள் தாங்கள் அரசு தேர்வு எழுதுபவர்கள் கடினமாக உழைத்தால்தான் தாங்கள் தங்கள் இலக்கினை அடைய முடியும். அப்போதுதான் தாங்கள் எதிர்பார்த்த கல்லூரியில் சேருவதற்கு உதவிகரமாக இருக்கும்.
பரிகாரம்
நாகாத்தம்மனுக்கு தாங்கள் வெள்ளிக் கிழமை அன்று எலுமிச்சம்பழம் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே..
யாரையும் காக்க வைப்பது தங்களுக்கு பிடிக்காத ஒன்று. அப்படியே மற்றவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அதனை தாங்கள் தங்கள் சக ஊழியர்களில் சிலர் மூலம் பங்கிட்டு தாங்கள் தங்கள் வேலைகளை செய்து முடித்து விடுவிர்கள்.
வியாபாரத் துறையில் உள்ளவர்களுக்கு தாங்கள் அதிகமான முதலீடுகளை செய்ய அதற்குண்டான பணத்தொகை தங்கள் மனைவி மூலம் கிடைத்துவிடும். அவர்கள் அதற்கு உறுதுணையாக இருப்பர்.
குடும்பத் தலைவிகள் சொந்த வீடு கட்டும் எண்ணம், மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். விரும்பியவாறே தங்களின் வசதிக்கேற்ப நல்ல வீட்டினை கட்டிவிடுவீர்கள்.
கலைஞர்களுக்கு தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கதாபாத்திரம் தற்போது கிடைத்துவிடும். அதனை சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள்.
தங்களின் அரசு தேர்வு என்பதால் தாங்கள் இன்னும் சிரமப்பட்டு படிப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் தாங்கள் விருப்பப்பட்ட துறையில் சேர்ந்து மிளிர முடியும்.
பரிகாரம்
காளிகாம்பாள் கோவிலுக்குச் செவ்வாய்கிழமை அன்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..
மனித நேயம் மிக்கவர் நீங்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
சிறப்புப் பலன்கள்
வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள், தங்கள் மேலிடத்தில் நற்பெயரும் பாராட்டையும் பெறுவர். அதிக சலுகையும் கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் முடித்துவிடுவீர்கள்.
வியாபாரிகள், அதிக கொள்முதல் செய்து நல்ல லாபத்தை பெற்று விடுவீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளைப் பொருத்தவரை, சொந்த வீடு மனை இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல வீட்டுமனை வாங்கி விடுவர். அதற்குண்டான வங்கிக் கடனும் கிடைத்துவிடும்.
கலைஞர்கள் தங்கள் எதிர்பாலினரிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களில் இருந்து தப்பிக்கமுடியும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியர்களிடம் நற்பெயரும் பாராட்டையும் பெறுவர்.
பரிகாரம்
சாந்த நாயகி அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று அர்ச்சனை செய்வது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே..
ஒன்றை குறி வைத்து பயணிப்பவர் நீங்கள். அந்த இலக்கை அடையாமல் அடுத்த செயலில் ஈடுபடாதவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்தமாதிரியே தங்களுக்கு மேலதிகாரி மூலம் உங்களுக்கு நல்லதொரு சலுகையும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகள், தங்கள் கிளைகளை துவங்குவீர்கள். ஒரு சிலர் புதிய தொழில் ஆரம்பிக்க யோகம் உள்ளது. அதற்குண்டான முதலீட்டுக்கு வங்கி கடன் கிடைத்து அதன் மூலம் முதலீடு செய்வர்.
குடும்பத் தலைவிகளுக்கு நினைத்தவாறே பணப்புழக்கம் அருமையாக இருக்கும். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல கதாபாத்திரத்துடன் நல்ல சம்பளமும் கிடைத்துவிடும். வெளியூர் பயணங்களும் மேற்கொள்வர்.
மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகும். எதிர்பார்த்த கோப்பையை வென்று விடுவீர்கள்.
பரிகாரம்
ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் பெரிய மகான்களின் ஆசி கிடைக்கும்.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389