அக்டோபரில் பிஎப்பில் 13.41 லட்சம் ஊழியர்கள் சேர்ப்பு

3 weeks ago 4

புதுடெல்லி: ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப்ஓ, கடந்த அக்டோபர் மாதத்தில் 13.41 லட்சம் பேர் பிஎப்பில் புதிதாக இணைந்துள்ளதாக புள்ளிவிவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. இது வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலன்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை காட்டுவதாக ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. அதன் அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் இபிஎப்ஓவிலிருந்து 12.90 லட்சம் ஊழியர்கள் விலகி, புதிதாக 13.41 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த எண்ணிக்கை 2023 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.23 சதவீதம் அதிகமாகும். இதில், 7.5 லட்சம் பேர் முதல் முறை உறுப்பினர்கள். 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 5.43 லட்சம் பேர். மேலும், இந்த மாதத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.79 லட்சமாகும்.

The post அக்டோபரில் பிஎப்பில் 13.41 லட்சம் ஊழியர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article