அக்.3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை; இயல்பைவிட அதிக மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மையம்

2 hours ago 2

சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட 18 சதவீதம் (39 செமீ) அதிகமாக தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழைபதிவானது. கடந்த ஆண்டைவிட தமிழக அளவில் இயல்பைவிட 14 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் அதிகமாக மழை பதிவானது.

Read Entire Article