அகவிலைப்படி 3% உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி

4 weeks ago 4

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமக்கரசிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காத நிலையிலும் ஒன்றிய அரசிற்கு எதிராக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே செப்டம்பர் மாதம் ஊதியமாக, 35000 ஊழியர்களுக்கு மாநில அரசு நிதியில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்த தாயுள்ளம் கொண்டவர் தமிழக முதல்வர். உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய உறுதியாக முன்னெடுத்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலன் தரும் வகையில் ரூபாய் 1931 கோடியை ஒதுக்கீடு செய்து அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post அகவிலைப்படி 3% உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article