'அகண்டா 2' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் - வெளியான புதிய தகவல்

1 month ago 7

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.

இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

அகண்டா 2 தாண்டவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக ஆதி நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் பிரபலம் வித்யா பாலன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர் அரசியல் தலைவராக நடிப்பதாகவும் தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் , என்.டி.ஆர் பயோபிக் படத்திற்கு பிறகு 2-வது முறையாக பாலகிருஷ்ணாவுடன் வித்யா இணைவார்.

Read Entire Article