சென்னை: 2024ல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக ஒன்றிய அரசு விடுவித்தது. ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,280.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்துக்கு ரூ.588.73 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.
The post ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக விடுவித்தது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.