கள்ளக்குறிச்சி: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் நகராட்சியில் முதல்கட்டமாக 450 குடும்பங்களுக்கு அமைச்சர் பொன்முடி தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படுகிறது. புயல் மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
The post ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.