hibox செயலி மூலம் ரூ.500 கோடி வரை பண மோசடி... சென்னையைச் சேர்ந்த நபர் டெல்லியில் கைது

4 months ago 34
நாடு முழுவதும் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்தாக கூறப்படும் வழக்கில் hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த சிவராம் ஜெயராமன் என்பவரை நபரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செயலியில் குறைந்தபட்சம் 300 ரூபாய் தொடங்கி ஆயிரக்கணக்கில் பல்வேறு வழிகளில் மிஸ்டரி பாக்ஸ் என்ற திட்டத்தில் பணத்தை செலுத்தினால், வீட்டிற்கு வரும் அந்த மிஸ்டரி பாக்ஸில் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல பரிசு பொருட்கள் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. தெற்காசிய பகுதியில் சிவராம் ஜெயராமனை இயக்குனராக அமர்த்தி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியிருப்பது தெரிவந்துள்ளது. 
Read Entire Article