930 மில்லி கிராம் எனும் மிகக் குறைந்த தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில்  தேர் - பொற்கொல்லர் சாதனை

4 months ago 10

கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே.முத்துக்குமரன் 930 மில்லி கிராம் தங்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் செய்து சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளர். 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

Read Entire Article