சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. நயாப் சிங் சைனி முதல்வராக உள்ளார். இங்குள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்.5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இங்கு 46 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ முயற்சி செய்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரபிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். ஆம்ஆத்மியும் இங்கு தனித்து களம் இறங்கி உள்ளது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து நாளை காலை அரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 20,629 பூத்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை காலை 7 மணி முதல் 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்படுகின்றன.
The post 90 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.