டெல்லி: 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு பயிற்சி இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
The post 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் appeared first on Dinakaran.