9 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் பதிவுத்துறை தலைவர் உத்தரவு

3 months ago 23

சென்னை: தமிழகத்தில் 9 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், ஈரோடு அவல் பூந்தை சார்பதிவாளராக இருந்த பெருமாள் ராஜா கிருஷ்ணகிரி கெலமங்கலம் சார்பதிவாளராகவும், ஆவடி சார்பதிவாளர் பாலமுருகன் நாமக்கல் நாமகிரிப்பேட்டைக்கும், ஈரோடு அம்மாபேட்டை சார்பதிவாளர் கெளரி மனோகிரி சேலம் சூரமங்கலத்திற்கும், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சார்பதிவாளர் ரகோத்தமன் கோவை சிங்காநல்லூர் (தெற்கு) தற்காலிக இணை சார்பதிவாளராகவும்,

தூத்துக்குடி ஏரல் சார்பதிவாளராக இருந்த சரவணன் புதுக்கோட்டை 1 எண் இணை சார்பதிவாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்டப் பதிவாளர் (சீட்டு -சங்கம்) சார்பதிவாளர் ஜெயகுமார் வேலூர் கணியம்பாடிக்கும், செய்யாறு-கண்ணமங்கலம் சார்பதிவாளர் மணிகண்டன் ஆற்காடு சார்பதிவாளராகவும், ராமநாதபுரம் துணைப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் சார்பதிவாளர் (நிர்வாகம்) முத்துக்கண்ணன் கோவை (வடக்கு) தொண்டாமுத்தூர் சார்பதிவாளராகவும், பாளையங்கோட்டை அசல் பதிவு பிரிவு கண்காணிப்பாளர் தினேஷ் குன்றத்தூர் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post 9 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் பதிவுத்துறை தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article