8 எருமை மாடுகள் பலி

7 hours ago 1

 

ஸ்ரீபெரும்புதூர், பிப்.23: சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மற்றும் அவரது, உறவினர்களுக்கு சொந்தமான 8 எருமை மாடுகள், அதே பகுதியில் மேய்சலுக்கு சென்றுள்ளன. அப்போது மின்சார வயர் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்துள்ளது.

இதில், மின்சாரம் பாய்ந்து 8 எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானது. தகவல் அறிந்த சோமங்கலம் மின்வாரிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்து, இறந்து கிடந்த 8 எருமை மாடுகளை அப்புறப்படுத்தினர். சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 8 எருமை மாடுகள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article