8,000 உதவிப்பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

2 weeks ago 4

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக்கல்லூரிகளில் சுமார் 8000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கலைக் கல்லூரி பணியிடங்களில் ஏறக்குறைய 75% அளவுக்கு கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது கல்வித்தரத்தை பாதிக்கும். எனவே, 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் 14ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.

The post 8,000 உதவிப்பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article