7வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை: ஜே.இ.இ. தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு

2 months ago 15

டெல்லி,

டெல்லி ஜாமியாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பு முடித்துள்ளார். அவர் இந்தியாவில் சிறந்த இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைத்தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்தார்.

அதேவேளை, நுழைவுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று மாணவிக்கு மிகுந்த அச்சம் எழுந்துள்ளது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி நேற்று விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்துகொண்டார். தான் வசித்து வந்த குடியிருப்பு கட்டிடத்தின் 7வது மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்குமுன் சிறுமி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் முடியவில்லை. நான் ஜே.இ.இ. தேர்வில் தோற்றுவிட்டேன்' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Read Entire Article