75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

7 months ago 26

 

நாமக்கல், நவ.17:நாமக்கல் மாநகராட்சியில் கொசவம்பட்டி, நல்லிபாளையம், சேலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, துப்புரவு அலுலவர் திருமூர்த்தி தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் மூலம் பூசப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், சில்வர் முலாம் பூசப்பட்ட பிளாஸ்டிக் பைகள், சில்வர் முலாம் பூசப்பட்ட தட்டுகள் ஆகிய பொருட்கள் அங்குள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், சூப்பர் மாக்கெட்டுகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான்ராஜா, பாஸ்கரன், களப்பணி உதவியாளர் சபரிநாதன் மற்றும் தூய்மை திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article