5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

3 hours ago 2

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள குராப் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சிங். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி சாக்லேட் தருவதாக கூறி 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை கற்பழித்து, கொலை செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவத்தன்று இரவே அசோக் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹூக்ளி மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த விசாரணையில் அசோக் சிங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்துக்காக அசோக் சிங்குக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம் நடந்த 54 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி போலீசார் மற்றும் நீதித்துறைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article