5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

3 months ago 29

பிரிஸ்டல்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த 2 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மார்ஷ் விலகியுள்ளார். அதனால் ஸ்டீவ் சுமித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சுமித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Read Entire Article