
புதுடெல்லி,
குஜராத் (2 தொகுதி) கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் (தலா 1) ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த வாக்கு எண்ணிக்கை ஜூன் 23-ம் தேதி நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் மறைவு மற்றும் பதவி விலகல் ஆகியவற்றால் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தொகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.