நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், புகழ் பெற்ற நாகூர் தர்காவிற்கு, 470 ஆண்டு பாரம்பரிய பழக்க வழக்கத்தின் படி, பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் இயற்கை எய்தினார். அவரது மறைவையொட்டி தர்கா பழக்க வழக்கங்கள் படி 3ம் நாள் அடுத்த வாரிசு பொறுப்பேற்க வேண்டும்.
அதன்படி அவரது மூத்த மகன் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் நேற்று (22ம் தேதி) நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பொறுப்பேற்றார். இவர் நாகூர் ஆண்டவரின் 11ம் தலைமுறை ஆதீனமாவர். பாரம்பரிய முறைப்படி செய்யது முஹம்மது கலிபா சாஹிபுக்கு நாகூர் ஆண்டவரின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு குண்டுகள் முழங்க, நாகூர் ஆண்டவரின் சன்னதி திறக்கப்பட்டு பாத்திஹா நிகழ்ச்சி நடந்தது.
The post 470 ஆண்டு வழக்கத்தின்படி நாகூர் தர்காவுக்கு புதிய டிரஸ்டி appeared first on Dinakaran.