40 வயதை ‘26’ எனக்கூறி ஏமாற்றி திருமணம் டாக்டரை கடத்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரூ.20 லட்சம் பறித்த அழகி: விஐபிக்களுக்கு வலைவிரித்து மோசடி

3 weeks ago 4

தேனி: தேனி, கேஆர்ஆர் நகரில் வசிப்பவர் 26 வயதான டாக்டர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் நந்தினி. இருவரும் பேஸ்புக் மூலமாக பழகி வந்துள்ளனர். அப்போது நந்தினி, தான் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர், வக்கீல், 26 வயது ஆகிறது என தெரிவித்துள்ளார். மேலும் நந்தகுமார் என்பவர் மாவட்ட நீதிபதியாக இருப்பதாகவும், ரெஹிர்சன் என்பவர் வக்கீலாக இருப்பதாகவும், சென்னையை சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல விஐபிக்களிடம் நல்ல நட்புடன் இருப்பவர் எனவும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் நந்தினி வற்புறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே, தனது நண்பர்கள் மூலம் டாக்டரை தொடர்பு கொண்டு, ‘உன் மீது நிறைய பேர் கேஸ் கொடுத்துள்ளனர். போலீசில் புகார் செய்யப் ேபாகிறோம்’ என மிரட்டியுள்ளனர். ஆனாலும், டாக்டர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரத்தில் நந்தினி, நந்தகுமார், ரெஹிர்சன், முருகேசன் ஆகியோர் டாக்டரை கடத்திச்சென்று தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். நந்தினி நேரில் வந்தபோது, அவருக்கு வயது 26 இல்லை; 40 வயது என்பது டாக்டருக்கு தெரியவந்தது.

இருந்தபோதும், வலுக்கட்டாயமாக நந்தினியை திருமணம் செய்ய வைத்து, அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இருவரும் உல்லாசமாக இருந்ததையும் பதிவு செய்துள்ளனர். அதனை டாக்டரின் நண்பர்கள், உறவினர்கள், அவருடன் தொடர்பில் உள்ளவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளனர். மேலும் டாக்டரிடமிருந்து ரூ.20 லட்சம் வரை பணம் பறித்ததோடு, மேலும் அவரது சொத்தையும் முழுமையாக அபகரிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர், தேனி போலீசில் கடந்த மாதம் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்டதாக நந்தினி, நந்தகுமார், ரெஹிர்சன், முருகேசன் ஆகியோர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகினர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் நந்தினி தனக்கு வலைத்தளத்தில் அறிமுகமாகிறவர்களின் வசதி, வாய்ப்புகளை அறிந்து, அவர்களுடன் நட்புறவாக பேசி, தன் வலையில் விழ வைப்பது வழக்கமாம்.

அவர்கள் வீழ்ந்ததும் தனது கூட்டாளிகள் மூலமாக மிரட்டி பணம் வசூலிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த மோசடிக்குழுவினருக்கு மூளையாக, முக்கிய நபராக நந்தினி செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கூறுகையில், ‘‘40 வயதான நந்தினி, தன்னை 26 வயது என கூறி என்னை ஏமாற்றினார்.

என்னை தவறாக வீடியோ எடுத்து எனது செல்போன் தொடர்பில் உள்ள ஆயிரக்கணக்கான நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் அவமானமடைந்தேன். தற்கொலை முடிவுக்கு செல்லக்கூட யோசித்தேன். அந்தளவுக்கு கடும் மன உளைச்சலை சந்தித்தேன். எனது பல லட்சம் பணத்தை பறித்ததோடு, சொத்தையும் அபகரிக்க முயற்சித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post 40 வயதை ‘26’ எனக்கூறி ஏமாற்றி திருமணம் டாக்டரை கடத்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரூ.20 லட்சம் பறித்த அழகி: விஐபிக்களுக்கு வலைவிரித்து மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article