40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு; காஷ்மீரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு

1 month ago 8

ஜம்மு: காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இன்று இறுதிகட்ட தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்.18, செப்.25 மற்றும் அக். 1 ஆகிய 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. செப்.18ம் தேதி 24 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்ட தேர்தலில் 61.38 சதவீதமும், செப்.25ம் தேதி 26 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவானது. மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

ஜம்மு பகுதியில் 24, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர்கள் தாராசந்த், முசாபர் பெய்க் உள்பட 415 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். 7 மாவட்டங்களில் நடக்கும் இந்த தேர்தலுக்காக 20 ஆயிரம் தேர்தல் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ேதர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படும்.

The post 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு; காஷ்மீரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article