40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சு கழிவு அகற்றம்

4 months ago 12


போபால்: 40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சு கழிவு அகற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984ம் ஆண்டு திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. அவற்றை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் கெடு விதித்தது.

இந்நிலையில் நேற்றிரவு போபாலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் 12 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சு கழிவுகள் ஏற்றப்பட்டு பிதாம்பூர் என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. 250 கி.மீ. தூரம் க்ரீன் காரிடாரில் கன்டெய்னர் லாரிகள் பயணிக்கிறது. 50 போலீசார் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கின்றனர். இதற்காக 12 கன்டெய்னர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 30 நிமிட ஷிஃப்ட் முறையில் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசங்களுடன் 200 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீனமானதாகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் அழித்தால் 51 நாட்கள் ஆகும்.

The post 40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சு கழிவு அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article