4 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் சுஷாந்த்

3 hours ago 2

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் காளிதாசு சுஷாந்த் அனுமோலு. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'காளிதாசு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'இச்சட வாகனமுலு நீலப்பரடு' படத்தில் நடித்தார்.

அதன்பிறகு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்காத இவர் ரவி தேஜாவின் 'ராவணாசுரன்' மற்றும் சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர் 'ஆகிய படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், நேற்று சுஷாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சுஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக எஸ்.ஏ 10 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிருத்விராஜ் சித்தேட்டி இயக்குகிறார்.

சஞ்சீவனி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் வருண் குமார் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். வரும் நாட்களில் படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article