புதுடெல்லி: 4 மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “குஜராத் மாநிலத்தில் காடி, விசாவதர் பேரவை தொகுதிகள், கேரளாவில் நிலாம்பூர் பேரவை தொகுதி, பஞ்சாப்பில் லூதியானா மேற்கு பேரவை தொகுதி மற்றும் மேற்குவங்கத்தில் காளிகஞ்ச் பேரவை தொகுதி ஆகிய 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.
ஜூன் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 4 மாநிலங்களின் 5 பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
The post 4 மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்: ஜூன் 23 வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.