4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தி.மலைக்கு புதிய எஸ்.பி

6 months ago 44

சென்னை: திருவண்ணாமலைக்கு புதிய எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த உத்தரவு:

டிஜிபி அலுவலகத்தில் பணியிலிருந்த எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி, திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.செல்வநாகரத்தினம் பங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு துணை ஆணையராக இருந்த எம்.சுதாகர் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த கே.பிரபாகர், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்று உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article