
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி, அப்படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. அதன்படி, இப்படத்தின் 2-வது பாடல் 'யோலோ'.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை திஷா பதானி, இப்பாடல் படமாக்கப்பட்டது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"எண்ணற்ற இடங்களில் 4 நாட்கள் 'யோலோ' பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது, இதற்காக 21 உடைகளை நான் மாற்றி இருந்தேன்" என்றார்.