3935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

5 hours ago 4

சென்னை : தமிழகத்தின் அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.3935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இந்த தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 4 தேர்வு தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், சிறு தொழில் கழகம், பாடநூல் மற்று கல்வியியல் பணிகள், மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்து கழகம், மாநில வாணிபக் கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், வனச் சார்நிலைப் பணி என பல்வேறு துறைகளில் கீழ் இயங்கும் நிறுவனங்களில் இருக்கும், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலைல் உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியளர், பால் அளவையாளர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வில் இடம்பெறுகிறது.

The post 3935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article