32 தொகுதிகளில் ஆண்களைவிட அதிகம் ஜார்க்கண்டில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பெண்கள்

3 weeks ago 4

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்ட பேரவை தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் போட்டியிடும் தொகுதி உள்பட 32 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றனர். 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்ட பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவ.20ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜ கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார்.அந்த தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.தொகுதியில் உள்ள 2.25 லட்சம் வாக்காளர்களில் 1.15 லட்சம் பேர் பெண்கள்.1.09 லட்சம் பேர் ஆண்கள். சராய்கேலா தொகுதியில் முன்னாள் முதல்வரும் சமீபத்தில் பாஜவில் சேர்ந்தவருமான சம்பாய் சோரன் போட்டியிடுகிறார். பர்ஹைட்,சராய்கேலா உள்பட 32 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.

இந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உள்ளனர். அதில் 26 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை. மாநிலத்தில் 28 தொகுதிகள் பழங்குடியினருக்கும் 9 தொகுதிகள் தலித்துகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவை பொது தொகுதிகள் ஆகும். மொத்தம் 2.60 கோடி வாக்காளர்களில் 1.31 கோடி ஆண்கள்,1.29 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

The post 32 தொகுதிகளில் ஆண்களைவிட அதிகம் ஜார்க்கண்டில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பெண்கள் appeared first on Dinakaran.

Read Entire Article