30-ந் தேதி முதல் மதுரை-ஐதராபாத் விமான சேவை நேரம் மாற்றம்

5 hours ago 1

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தனியார் விமான நிறுவனத்தின் சார்பில் மதுரை -ஐதராபாத் விமான சேவைக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த தனியார் விமானம் தினமும் ஐதராபாத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். மீண்டும் மதுரையில் இருந்து காலை 8.55 புறப்பட்டு, 10.40 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்திற்கு செல்லும்.

இந்த விமானம் வருகிற 30-ந்தேதி முதல் ஐதராபாத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. அதன்பின்னர், மீண்டும் மறுமார்க்கமாக காலை 7.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 9.25 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது.

இதேபோல, மற்றொரு விமான சேவையாக தற்போது ஐதராபாத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். மீண்டும் அந்த விமானம் மறுமார்க்கமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையம் சென்றடையும். இந்த விமானமும் வருகிற 30-ந்தேதி முதல் நேரம் மாற்றப்படுகிறது.

அதன்படி ஐதராபாத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். மீண்டும் இந்த விமானமானது மறுமார்க்கமாக மதுரையிலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு இரவு 6.40 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article